டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத் துறையினர் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், தனக்கு ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு ஒரு விரிவான அமர்வுக்குப் பரிந்துரை செய்தனர்.
மேலும் கெஜ்ரிவால் முதல்வர் பணிகளை தொடர்வது குறித்து அவரே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தனர். இதே மதுபான கொள்கை வழக்கை சிபிஐயும் விசாரித்து வருவதால், இடைக்கால ஜாமீன் கிடைத்தாலும் சிபிஐ வழக்கில் அவரது நீதிமன்றக் காவல் வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.