திருச்சி அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் வெள்ளைச்சாமி என்ற பிரதீப் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூரைச் சேர்ந்தவர் ஐயப்பன், துவாக்குடி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை வழிமறித்த வெள்ளைச்சாமி என்ற பிரதீப் குமார் துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஐயப்பன் அணிந்திருந்த 2 சவரன் செயின் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரதீப் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து, தங்கச்செயின், கைத்துப்பாக்கி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை அருகே ரவுடி துரை என்கிற துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், அவருடன் சென்ற உறவினர் நிலை என்ன ஆனது என கேள்வி எழுந்தது. இந்நிலையில், வழிப்பறி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.