ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக வைகையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு யாகசாலை பூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 16 வகையான வாசனைப் பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.