பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் பிரியாணி கடை நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவர், தனது பிரியாணி கடை விளம்பத்திற்காக, சவுக்கு சங்கரின் யூடியூப் நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் திருப்பிக் கேட்டபோது, விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில். கரூர் நகர காவல் நிலைய போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரை ஜூலை 23 -ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.