ஆங்கிலம் மட்டுமன்றி பிராந்திய மொழிகளிலும் சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ டாக்டர் ராம் மனோஹர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர், தாம் மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய காலக்கட்டத்தில், பதிவுகள் அனைத்தும் மராத்தி மொழியில் இருந்தபோதும், நீதிமன்ற நடைமுறைகள் ஆங்கிலத்தில்தான் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆனால், அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்குப் பணியிட மாறுதலாகி வந்தபோது, வழக்கறிஞர்கள் ஹிந்தியில் வாதிட்டத்தைக் காண நேர்ந்ததாகவும், பிராந்திய மொழியில் வாதிடும்போது வழக்கறிஞர்களின் திறமை வெளிப்பட்டதாகவும் டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.
எனவே, சட்டக் கல்வி பாடத்திட்டத்தில் ஆங்கிலத்துடன் பிராந்திய மொழிகளையும் சேர்க்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.