கோபோ அமெரிக்கா கால்பந்து இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன.
மியாமி நகரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா மற்றும் முன்னாள் சாம்பியனான கொலம்பியா அணிகள் என இரு பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கோப்பையை வெல்லும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.