நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை நெல்லியாலம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் நுழைந்தது.
அப்போது ஒரு வீட்டின் கதவை உடைத்து யானை உள்ள நுழைய முயன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.