34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!
Oct 28, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதனுக்குத் தேவையான உடல் உறுப்புகளைச் செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இஸ்ரேலில் உள்ள மருத்துவ மையம் உருவாக்கிய கிட்னி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மருத்துவ அறிவியல்துறைக் கடந்த சில ஆண்டுகளில் அதிவேகப் பாய்ச்சலில் வளர்ந்து வருகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை உலகெங்கும் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதற்குத் தீர்வு காண மருத்துவ அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளர்கள் நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனிதனின் உடல் உறுப்புகள், ஸ்டெம் செல்கள் மூலமாகவோ, திசுக்கள் மூலமாகவோ செயற்கையாக ஆய்வகங்களில் வளர்க்கப்படுகின்றன.

மனித உறுப்புகளின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த உறுப்புகள், பிறவிக்குறைபாடு, விபத்துகள் அல்லது நோய்களால் இழந்த உறுப்புகளுக்குப் பதிலாகப் பொருத்தப்படுகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள ஷெபா மருத்துவ மையம், டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மீளுருவாக்க மருத்துவம் அடிப்படையில் ஆய்வகத்தில் 3D சிறுநீரகத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறது.

இது 34 வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் முதல் உறுப்பு என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பதாகச் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. முந்தைய ஆர்கனாய்டுகள் நான்குவாரங்கள் கூட உயிர் வாழாத நிலையில், தாங்கள் உருவாக்கிய சிறுநீரகம் 34 வாரங்கள் உயிர் வாழ்ந்து வருவதாக ஷெபா சிறுநீரக மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்ப் பெஞ்சமின் டெக்கல் கூறியிருக்கிறார்.

சிறுநீரக ஆர்கனாய்டுகள், சிறுநீரகம் செயலிழப்பு, நோய் தாக்கம் போன்றவற்றைக் கண்டறியவும், குணப்படுத்துதலுக்கான அடிப்படையான வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும் வழிவகுக்கும்… எலிகள் மீது நடத்தப்படும் மருந்து சோதனைகளைக் குறைக்கவும் உதவும்.

பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தில் எந்தச் செல்களை பயன்படுத்த வேண்டும், செல்கள் சுரக்கும் உயிர் மூலக்கூறுகள், சிறுநீரகப் பாதிப்பை சரி செய்யும் திறன் போன்றவைப் பற்றிய தெளிவான புரிதல் கிடைத்ததும், ஆர்கனாய்டுகள் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்கு நகரும் என்று ஷெபா சிறுநீரக மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர்ப் பெஞ்சமின் டெக்கல் கூறியிருக்கிறார்.

பல்வேறு கட்ட சோதனைகளைக் கடக்க வேண்டியிருப்பதால், பயன்பாட்டிற்கு வர நீண்ட காலம் ஆகும் என்பதும் அவரது கூற்றின் மூலம் தெரியவருகிறது. ஆய்வகச் சிறுநீரக உருவாக்கம் மூலம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை எதிர்காலத்தில் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: மருத்துவ அறிவியல்துறைkidney3D kidney living for 34 weeks: Could help solve kidney problems3D சிறுநீரகம்சிறுநீரக பிரச்னை
Share
Tweet
SendShare
Previous Post

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

Next Post

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மதுரை – குருவாயூர் ரயிலில் ‘விஸ்டாடோம்’ பெட்டி : மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கும் பயணிகள் சிறப்பு தொகுப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies