மகாராஷ்டிர மாநிலம் அஞ்சனேரி அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மனித சங்கிலி அமைத்து வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அஞ்சனேரி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுற்றுலா பயணிகள் பலர் சிக்கினர்.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வழிநடத்த மனிதச்சங்கிலி அமைத்து சுமார் 6 மணி நேரம் போராடி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.