கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாடு முட்டியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.
தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்த அழகர் பெருமாள், திட்டக்குடி காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்றிருந்த மாடு முட்டியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அழகர் பெருமாள் மீது அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.