அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பாக பதிவான வீடியோ வெளியாகியுள்ளது.
பென்சில்வேனியா மாகாணம் பட்லரில் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரை தாமஸ் க்ரூக் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில், டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இதையடுத்து அந்த இளைஞர் சிறப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், டிரம்பை நோக்கிச் சுடுவதற்கு முன்பாக அவர் ஆயத்தமான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அப்போது அவரை பார்த்து அதிர்ந்துபோன பெண் ஒருவர், தாமஸ் க்ரூக்கின் பெயரைக் குறிப்பிட்டு கத்திக் கூச்சலிட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதன்மூலம் அந்தப் பெண்ணுக்கும், கொலையாளிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.