கல்வி உள்ளிட்ட துறைகளில் பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கே. காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். தனது தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றவும் நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.
















