மொரீஷியசுக்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
2 நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற அவரை அந்நாட்டு பிரதமர் பிரவீன் ஜெகநாத் வரவேற்றார். தொடர்ந்து போர்ட் லூயிஸ் நகரில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை, சாகர் திட்டம், ஆப்பிரிக்காவை வளப்படுத்தும் முன்னெடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மொரீஷியஸ் முக்கிய பங்கு வகிப்பதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
முன்னதாக மொரிஷீயசில் வசிக்கும் 7-ஆம் தலைமுறை இந்திய வம்சாவளியினர், தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியாவுக்கு எளிதில் வந்து செல்லும் விதத்தில், அவர்களுக்கு ஓசிஐ அட்டைகள் வழங்கப்பட்டன.