சென்னையை அடுத்த ஆவடி அருகே, தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி என்ற பெண், பட்டாபிராமில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் கட்டட வேலை செய்து வந்தார். 3-வது மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
மயக்கமடைந்த அவரை, 3 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வளர்மதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.