நெல்லையில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் மற்றும் சேர்வலாளர் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேலும், மணிமுத்தாறு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மாஞ்சோலை ஊத்து பகுதியில் 98 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.