காவிரியில் உரிய நீரை திறக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு தொடர்கிறது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் மாதம் தோறும் திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற காவிரி நதி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடகா அரசு இதனை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.