சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் இந்த 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2-ம் கட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.