திருச்சியில் நண்பர்கள் போல பழகி தொழிலதிபரை கடத்திச் சென்று பணம் பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான மணிகண்டன் எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் தொழில் ரீதியாக பழகி வந்த பாலு, கணேசன் ஆகியோர் கூலிப்படையை வைத்து மணிகண்டனை கடத்திச் சென்றனர்.
பின்னர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் சுமார் 16 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.