தெலங்கானாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பிரபுல் தேசாய் என்பவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற போலியான மாற்றுத் திறனாளி சான்றிதழை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 532-வது இடம் பிடித்த பிரபுல் தேசாய், கரீம் நகர் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனக்கு எலும்பு குறைபாடு உள்ளதால் கால்கள் 45 சதவீதம் செயலிழந்துள்ளதாகக் கூறி, மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரபுல் தேசாய் குதிரை சவாரி உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரபுல் தேசாய், தன்னால் நடக்கவும், சைக்கிள் ஓட்டவும் முடியும் என தெரிவித்துள்ளார்.