சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.மகாதேவன், கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது 2-வது நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்றுள்ளார்.