சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து குறைந்து காணப்பட்டது.
இதனால் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து 100 டன் அளவில் தக்காளி வந்துள்ளதால் கிலோவுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒரு கிலோ தக்காளி 60 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.