தேனியில் பெய்துவரும் கனமழை காரணமாக வீரபாண்டி பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கனமழை பெய்துவரும் நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆயிரத்து 271 கன அடியாக உள்ளது.
இதனால் வீரபாண்டி முல்லை பெரியாற்றில் தண்ணீரின் ஆட்பறித்து செல்கிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கருதி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.