ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு சுமார் 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஒகேனக்கலிலுக்கு வரும் நீரின் வரத்து நேற்று மாலை 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், காலை 5.30 மணி முதல் விநாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.