யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் யுபிஎஸ்சி ஆணைய தலைவராக மனோஜ் சோனி பதவியேற்று செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி தனிப்பட்ட காரணங்களுக்காக, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தி பணியில் இணைந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்த விசாரணைக்குப் பின்னர் நேற்றைய தினம் பூஜா கேதக்ர் மீது யுபிஎஸ்சி சார்பில் புகாரளித்து வழக்குப்பதியப்பட்டது. இதே போல மேலும் பலரும் முறைகேடாக யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்தே மனோஜ் சோனி ராஜினாமா செய்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.