நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு பிரதமர் லக்சன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா-நியூசிலாந்து உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக மாண்புகள், மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகள் ஆகியவற்றில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், வரும் ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட தொடர்புகள் ஏற்படுத்தியுள்ள உத்வேகத்தை எடுத்துரைத்த அவர்கள், வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, கால்நடை பராமரிப்பு, மருந்துகள், கல்வி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக் கொண்டனர்.
நியூசிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினரின் நலன்களை கவனித்து வரும் பிரதமர் லக்சனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான முயற்சிகள் தொடரும் என்று பிரதமர் லக்சன் உறுதியளித்தார்.