வங்கதேசத்தில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளடைவில் இந்த போராட்டம் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 105 பேர் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கலவரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.