2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் இருக்குமென பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசியவர்,
நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.
முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கில், இந்த பட்ஜெட் மைல்கல்லாக இருக்குமெனவும் கூறினார்.
சில கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்து வருவதாகவும், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.