தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மீண்டும் ஏன் திறக்கக் கூடாது என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் மதுபானத்தை சூப்பர் மார்க்கெட், ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க ஏன் பரீசிலிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது.
மேலும் டாஸ்மாக் மதுபாட்டில்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், இதற்கு தமிழக அரசு வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.