குஜராத் மாநிலம் சூரத்தில் கனமழை காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூரத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். இந்த நிலையில், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென போலீஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, மரைன் டிரைவ் பகுதியில் உள்ள கடலில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால், கடலோர பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.