குஜராத்தில் துவாரகா தேவபூமி மாவட்டம் பனேலி கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
குஜராத்தின் தென் கடலோர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தேவபூமி மாவட்டம் பனேலி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதியே தனித்தீவாக மாறியது.
உண்ண உணவு கூட கிடைக்காமல் அவதிப்பட்ட அந்தக் கிராம மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.