டி20 தொடரின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்ய பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கௌதம் கம்பீர், கேப்டனாக வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் சூர்யகுமார் யாதவிடம் உள்ளது என தெரிவித்தார்.