DSLR கேமரா வாங்குவதற்காக தான் வேலை செய்யும் வீட்டில் நகை பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி துவாரகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நீத்து என்ற பெண் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்துள்ளார்.
You tube சேனல் தொடங்கி வீடியோ போடுவதற்காக, DSLR கேமரா வாங்க திட்டமிட்ட அந்த பெண், தான் வேலை செய்யும் வீட்டிலேயே நகை, பணம் திருடியதாக கூறப்படுகிறது.
பணம், நகை காணாமல்போனது குறித்து, வீட்டின் உரிமையாளர் புகார் அளித்ததை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நீத்துவை போலீசார் கைது செய்தனர்.