செல்ஃபோன்கள் மீதான சுங்கவரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுவதால் அதன் விலையு குறையவுள்ளது.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி, கைப்பேசி உதிரிபாகம் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.
அந்த வகையில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேபோல பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவீதமாகவும், கைப்பேசி உதிரி பாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்க வரி 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர 25 வகையான கனிமங்களை இறக்குமதி செய்யும்போது அதற்கான சுங்கவரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 3 விதமான புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கப்படுவதாக பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.