விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
டிஜிட்டல் முறையில் வேளாண் பொருள்கள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்படும் எனவும், விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.