உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வட்டி மானியத்தின் கீழ்,10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7-ஆவது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது உரையாற்றிய அவர், மாணவர்களுக்குப் பலனளிக்கக் கூடிய திட்டங்களை பட்டியலிட்டார். அந்த வகையில், மத்திய அரசின் எந்தவொரு திட்டத்திலும் பயன்பெறாத மாணவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் உள்நாட்டில் கல்வி நிறுவனங்களில் பயிலும்பட்சத்தில், 10 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதையொட்டி, ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் தலா ஒரு லட்சம் மாணவர்களுக்கு இ-வவுச்சர் எனப்படும் மின்னணு ரசீது விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் ஆயிரம் தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.