அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டுமென திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து வயோதிகம் காரணமாக ஜோ பைடன் விலகிய நிலையில், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை அவர் முன்மொழிந்தார்.
இந்த நிலையில், கமலா ஹாரிசுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரத்தில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸின் மூதாதையர்கள் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.