கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் அவதியடைந்தனர்.
டி.குன்னத்தூர் கிராமத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பலர் இங்குவந்து சிகிச்சைபெறும் நிலையில் அமர இருக்கை இல்லாமலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமலும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் அரசு வழங்கிவரும் சத்து மாவு உள்ளிட்டவையும் முறையாக கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.