தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் வனஸ்பதி கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகளின் தரமும், சுவையும் குறைந்து உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரத்தை பரிசோதிப்பதற்காக நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெய்யை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வின் முடிவின் அடிப்படையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்தை தேவஸ்தானம் கருப்பு பட்டியலில் வைத்துள்ளது.