சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! - வங்கதேச துறைமுகத்தை கைப்பற்றிய இந்தியா!
Jan 14, 2026, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! – வங்கதேச துறைமுகத்தை கைப்பற்றிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் சபகர் துறைமுகம் மற்றும் மியான்மரின் சிட்வே துறைமுகத்தின் செயல்பாட்டு உரிமையை இந்தியா பெற்றுள்ள நிலையில், வங்கதேசத்தின் மோங்லா துறைமுக செயல்பாட்டு உரிமையையும் கைப்பற்றி உள்ளது. சீனாவிற்கு எதிரான போட்டியில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.

தனது கடல்சார் பட்டுப்பாதை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சீனாவுக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மிக முக்கியமானதாக உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள Gwadar குவாடார் முதல் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள Djibouti ஜிபூட்டி வரை, பல துறைமுகங்களில் கணிசமான முதலீடுகளை சீனா செய்து வருகிறது. குறைந்தது 17 இந்தியப் பெருங்கடல் துறைமுகங்களில் சீனா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அவற்றில் 13 துறைமுகங்களை நிர்மாணிப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது.

மேலும், கொள்கலன் போக்குவரத்தின் அடிப்படையில் உலகின் முதல் 10 துறைமுகங்களில் இந்திய துறைமுகங்கள் ஒன்று கூட இதுவரை இடம் இடம்பெறவில்லை. ஆனால் சீனாவில் ஆறு துறைமுகங்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதில்,சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முக்கிய கடல்சார் இடங்களில் தனது செல்வாக்கை இந்தியா அதிகரித்து வருகிறது. மேலும் நாட்டின் கடல் எல்லைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப் படுத்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக. வங்க தேசத்தின் மோங்லா துறைமுகத்தின் செயல்பாட்டு உரிமையை இந்தியா பெற்றுள்ளது என்றாலும், அதற்கான ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. மோங்லா துறைமுக ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், மோங்லா துறைமுகத்தில் உள்ள முனையத்தை இந்தியன் போர்ட் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவனமே நிர்வகிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்க தேசத்தின் தென் மேற்கு பகுதியில் , வங்காள விரிகுடாவில் இருந்து மேலே போசூர் ஆறு மற்றும் மோங்லா நுல்லாவின் சங்கமத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து அனுப்புவதில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இந்த துறைமுகத்தை கூடுதல் கொள்கலன் சரக்குகளை கையாளுவதற்கு ஏற்ப , இப்போது இந்தியா மேம்படுத்தி இருக்கிறது.

கடந்த மாதம் இந்தியன் போர்ட் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவன பிரதிநிதிகள் குழு , மோங்லா துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை மதிப்பீடு செய்து, மேம்படுத்தும் திட்ட முன்மொழிவை மோங்லா துறைமுக ஆணையத்திடம் வழங்கி இருந்தது.

இந்நிலையில், தெற்காசியாவில் பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் மோங்லா துறைமுகத்தை நிர்வகிக்கும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கான முக்கிய இணைப்பாக இந்த துறைமுகம் செயல்படும் என்றும் மேம்படுத்தப்பட்ட துறைமுக உள்கட்டமைப்பு, சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்கும் என்றும், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Tags: An end to Chinese dominance! - India captured the port of Bangladesh!
ShareTweetSendShare
Previous Post

2025-க்கு தள்ளிப் போகும் ‘புஷ்பா – 2’ ரிலீஸ்!

Next Post

மத்திய பட்ஜெட் விண்வெளித் துறைக்கு 1000 கோடி ஒதுக்கீடு ஏன்?

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies