பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஸ்டாலின்! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jan 15, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jul 25, 2024, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, திமுகவுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம்  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர்.

தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள். ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Tags: Stalin abuses power in responsible government positions! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஐபிஎல் ஏலம்?

Next Post

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies