வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
சிவல்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் துபாயில் எலக்ட்ரீசியன் வேலைக்காக சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, குமார் உயிரிழந்து விட்டதாக, மனைவி லலிதாவை செல்போனுக்கு தொடர்புகொண்டு குமாருடன் பணியாற்றும் சக ஊழியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனைவி லலிதா ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.