தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது.
மழை வேண்டியும், விவசாயம், வியாபாரம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.