பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில், தற்பொழுது 97 அடிவரை தண்ணீர் நிரம்பி வழிகிறது.
பில்லூர் அணை ஏற்கனவே நடப்பு ஆண்டில் 2 முறை நிரம்பியுள்ள நிலையில், 3-வது முறையாக நிரம்பிய நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.