தங்கலான் படத்தில் நடித்த பின்னர் கிட்டத்தட்ட ஐந்து வித மருத்துவர்களை தாம் சந்தித்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது என மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
மாளவிகா தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக தயாராகி வரும் தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக தினசரி மேக்கப்பிற்கு மட்டுமே குறைந்தபட்சம் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் பொறுமையாக செலவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் மாளவிகா கூறியுள்ளார்.