பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில், பிஹாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபரான அபிஷேக், மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கொலையான கீர்த்தி, தாக்குதல் நடத்தியவருடைய காதலியுடன் பணி புரிந்தவர்.
அபிஷேக்குடன் பேச வேண்டாம் என இளம்பெணிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கீர்த்தி கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.