கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 633 இந்திய மாணவர்கள் 41 வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநில எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவு அமைச்சகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் அதிகபட்சமாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 பேரும், பிரிட்டனில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும் பதிவாகியுள்ளது.