ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்.
க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டோக்கியோ சென்றுள்ளார். அங்கு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்துவைத்த அவர், காந்தியின் போதனைகளை நினைவுகூர்ந்து பேசினார்.
உலகம் முழுவதும் பதற்றம், வெடிகுண்டு தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளும் இந்த வேளையில், மகாத்மா காந்தியின் சிந்தனையை நினைவுகூர வேண்டுமென்று ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும், போக்களத்திலிருந்து பிரச்னைக்குத் தீர்வு காண இயலாது என காந்தி போதித்ததாகவும், 80 ஆண்டுகளுக்கு முன்வைத்த அந்தக் கருத்து இன்றைக்கும் பொருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.