நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
நடப்பாண்டின் டி-20, ஒருநாள் என அனைத்துவித போட்டிகளையும் சேர்த்து 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் என 1017 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த பட்டியலில் குசல் மெண்டிஸ் 888 ரன்கள், இப்ராஹிம் சத்ரான் 844 ரன்கள், ரோஹித் சர்மா 833 ரன்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.