கைமாறிய இந்தியா சிமெண்ட்ஸ்! : ரூ.3954 கோடிக்கு வாங்கிய பிர்லா!
Aug 31, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைமாறிய இந்தியா சிமெண்ட்ஸ்! : ரூ.3954 கோடிக்கு வாங்கிய பிர்லா!

Web Desk by Web Desk
Jul 29, 2024, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்தியாவின் பெரிய சிமெண்ட் சாம்ராஜ்ஜியத்தின் பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் கைப்பற்றி இருக்கிறது. 3954 கோடி ரூபாய்க்கு நிறுவன பங்குகளைக் கொடுத்துவிட்டு இந்தியா சிமெண்ட்ஸை விட்டு வெளியேறுகிறார் ஸ்ரீனிவாசன். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்தியா சிமெண்ட்ஸ் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 9 பெரிய பட்டிலயிலிடப்பட்ட சிமெண்ட் நிறுவனமாகும்.

ஆண்டுக்கு சுமார் 13 மெகா டன் சிமெண்ட்டை தென்னிந்தியாவிலும், 1.5 மெகா டன் சிமெண்ட்டை ராஜஸ்தானிலும் உற்பத்தி செய்து வருகிறது

முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவருமான 80 வயதான ஸ்ரீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தனது தந்தை டி .எஸ். மறைவை அடுத்து, அமெரிக்காவில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த 23 வயதான என் ஸ்ரீனிவாசன் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். பிறகு படிப்படியாக வளர்ந்து, 1989ம் ஆண்டு முதல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார் ஸ்ரீனிவாசன்.

1946ம் ஆண்டு எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில்1949 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

தமிழ்நாடு, தெங்கானா மற்றும் ஆந்திராவில் ஏழு ஒருங்கிணைந்த தொழிற்சாலைகளும் ராஜஸ்தானில் திரிநேத்ரா சிமெண்ட் தொழிற்சாலையும் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு தொழிற்சாலையும் இந்தியா சிமெண்ட்ஸ் வசம் வைத்திருந்தது.

சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட் மற்றும் ராசி கோல்ட் என மூன்று முக்கிய பிராண்டுகளைத் தன வசம் வைத்துக் கொண்டு, தென்னிந்தியாவின் சிமெண்ட் தொழில்துறையில் மிகப் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கெனவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7,05,64,656 பங்குகளை 268 ரூபாய் என்ற விலைக்கு அல்டரா டெக் சிமெண்ட் நிறுவனம், கடந்த ஜூன் மாதம் வாங்கியது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 22.77 சதவீத பங்குகளை ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கி இருந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை , மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின்32.72 சதவீத பங்குகளை வாங்குதற்கு , அல்ட்ரா டெக் நிறுவன நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன் மூலம் இரண்டாவது முறையாக இந்தியா சிமெண்ட்ஸ் 10,13,91,231 பங்குகளை ஒரு பங்குக்கு 390 ரூபாய் விலைக்கு என்ற கணக்கில் மொத்தம் 3954 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அல்ட்ரா டெக் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சுமார் 55 சதவீத பங்குகளை அல்ட்ரா டெக் கைப்பற்றியுள்ளது.

இது மட்டுமில்லாமல் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் குருநாத், மற்றும் நிதி சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ரூபா குருநாத் ஆகியோரிடமிருந்து 6.44 சதவீத பங்குகளையும் அல்ட்ரா டெக் வாங்க உள்ளது.

அதிகமான உற்பத்தி செலவு அழுத்தங்கள், போட்டி காரணமாக ஏற்பட்ட விலை நிர்ணய சிக்கல்கள் மற்றும் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சமாளிக்க முடியாமல் போய்விட்டன. இதன் காரணமாகவே, நிறுவனத்தின் பங்குகளை அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்ததாக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்களுக்கு உரையாற்றிய அவர், பல ஆண்டுகளாக ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, ஊழியர்களின் தொழிலில் எந்தவித மாற்றம் ஏற்படாது என்று தெரிவித்தார். மேலும் , இந்தியா சிமெண்ட்ஸில் இதுவரை நடைமுறையில் இருந்த அதே கொள்கைகளையே பின்பற்றப் படும் என்று பிர்லா குழுமம் தனிப்பட்ட முறையில் தனக்கு உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

எனவே, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் எவரும் எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டிய வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, முதலில் பிசிசிஐயின் செயலாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் இருந்த ஸ்ரீனிவாசன், 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, ​​இந்தியா சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (CSK) ஏலம் எடுத்து தனது தனித்துவத்தைக் காட்டினார். இன்று ஐபிஎல் என்றாலே CSK என்ற பெருமையை உண்டாக்கிக் கொடுத்த பெருமை ஸ்ரீனிவாசனையே சேரும்.

Tags: Changed hands India Cements! : Birla bought for Rs.3954 crore!
ShareTweetSendShare
Previous Post

வீழ்ச்சியை நோக்கி சீன பொருளாதாரம்? அதிர வைக்கும் பின்னணி!

Next Post

3 IAS பயிற்சி மாணவர்கள் பலியாக காரணம் என்ன? விதிமீறலால் விபரீதம்!

Related News

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

அம்பத்தூர் சிட்கோ சாலையில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி!

ஆண்டிபட்டி அருகே பேருந்து தாமதமாக வருவதற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

105 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் ராமகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies