சீனாவின் ஹுனான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மத்திய சீனாவின் ஹுனான் மாவடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.